
ஒரு லுங்கியை எடுத்து மாட்டிக்கொண்டு, கை கால்களை கழுவிக்கொண்டு, சாப்பிட வந்தமர்ந்தான் கதிரேசன்.நல்ல கறிக்குழம்பு
வாசனை அவனை இழுத்தது. சமையலறையில் இருந்து சாப்பாடு, குழம்பு அனைத்தையும் எடுத்துக்கொண்டு பரிமாற
வந்தாள் ஜோதி. ஜோதியைக் கண்டதும் இவனுக்குள் ஒரு குழப்பம். என்ன? இவள் இன்று எதிர்பாராத அளவு சிறிது அழகு
மிகுந்து காணப்படுகிறாள் என்றும், என்ன
இன்னைக்கு விசேஷம்? புடவையும்
புதுசா மாறியிருக்கு, காசே
பத்தமாட்டேங்குது சொல்லிட்டு. இருந்தா, இதுக்கெல்லாம்
காசு எக்கச்சக்கமா வந்தாச்சு போல என தனக்குள்ளே தானே கேள்வி எழுப்பிக்கொண்டான்.
ஜோதி கதிரேசனுக்கும், அன்புக்கும்
சாப்பாட்டினை எடுத்து வைத்தாள். இருவரும் சாப்பிடத் தொடங்கினர். அப்பொழுது ஜோதி, "ஏங்க! இப்பவெல்லாம் கடையில விலவாசி ஏறிட்டே
இருக்கு. நீங்க தர பணம் காய்கறி, மளிகைக்கெல்லாம்
கரெக்டா இருக்கு. கரண்ட் பில்லும், சிலிண்டர்
ரேட்டும் ஏறிடுச்சு. நான் ரொம்ப நாளா உங்கிட்ட சொல்லணும்னு நினைச்சிட்டு இருந்தேன்
நானும் வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிச்சேன்னா தான் சரியா இருக்கும். நீங்க
என்ன சொல்றீங்க என்று பணிவுடன் கேட்டாள். ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவன் இதையும்
கேட்டபின்பு, "அதுலாம் என்ன
அவசரம். நான் நல்லாதான இருக்கேன். அதுலாம் நீ போகணும்னு அவசியம் இல்லை. அப்படியும்
போனா நீ என்ன பண்ணுவ, எங்கே
வேலைக்குப் போவ?" எனக்
கோபத்துடன் கேட்டான். ஜோதி, “நான் நம்ம
அண்ணாச்சி இருக்காருலங்க, அவருகிட்ட
கேட்டு வச்சிட்டேன், அவருக்குத்
தெரிந்த செக்யூரிட்டி ஒரு ஃபிளாட்டில் வேலைசெய்கிறாராம், அங்கு ஒரு வீட்டில் சமையல் வேலைக்கு ஆள்
கேட்டிருக்காங்களாம். நான் உங்ககிட்ட கேட்டு சொல்றேன்னு வந்துவிட்டதாகச்” சொல்லி முடித்தாள். கதிரேசன், “ஓகோ, அப்படியா எல்லாம் முடிவு பண்ணிட்டுதான்
வந்திருக்கியா, அப்புறம் என்ன
என்கிட்டெல்லாம் கேட்கிற, போறதுனா போ, வேலைக்கு போறியோ, எங்க போறியோ”, என அவளைப் புண்படுத்தியே மீண்டும் மீண்டும்
பேசினான். பேசப் பேச அவர்களிடையே பெரிய வாக்குவாதம் ஆனது. வாக்குவாதம் சண்டை வரச்
செல்ல, குடி போதையில் இருந்த
கதிரேசன் ஜோதியின் இன்றைய பொலிவினையும், அவள்
அலங்காரத்தையும் வைத்து அவளைத் தவறாகப் பேசத் தொடங்கினான். அதைக் கேட்டு ஜோதி
கடும் கோபமும், உள்ளே
மனமுடைந்தும் போனாள். அன்பழகனோ, "யோவ், உனக்கு
அவ்வளவுதான் மரியாதை, இன்னொரு தடவை
அம்மாவைத் தப்பாகப் பேசினால் நடக்கறது வேற", என மிரட்டினான். "என்னடா இங்க கத்தற ? அப்படித்தான் பேசுவேன், உங்க அம்மாவை அப்படித்தான் சொல்வேன், தேவைப்பட்டால் அடிக்கவும் செய்வேன்"
எனச் சொல்லி ஜோதியை அடித்து கீழே தள்ளிவிட்டான். விழுந்தவள் நேராக மாவு அரைக்கும்
கிரைண்டர் முனையிலே சென்று மோதினாள். அடுத்த கணமே நெற்றியிலிருந்து இரத்தம் பெருகி
வழிந்தது. அதைத் தாங்காமல் அருகில் இருந்த அன்பு பதற்றத்துடன் ஓடிவந்து உடனே
தொலைபேசியை எடுத்து 108-க்கு அழைத்தான், சிறிய துணியை
எடுத்து நெற்றியில் கட்டினான். கதிரேசன் போதையிலேயே உறங்கிவிட்டான்.
ஆம்புலன்ஸ் வந்து ஜோதியையும், அன்பையும்
ஏற்றி அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்தது. ரோகிணி அவசர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டாள். அன்பு அறைக்கு வெளியேயே அமர்ந்துகொண்டான். சில மணி நேரம்
கடந்து மருத்துவர்கள் வெளியே வந்து “பயப்பட ஒன்றுமில்லை. இரத்தம் அதிகமாகப்
போயிருக்கிறது, வெளிக்காயம்தான்.
இரத்தம் ஏற்றச் சொல்லியிருக்கிறேன். சரியாகிவிடுவார் தம்பி” எனக் கூறி என்ன
நடந்தது என்ற விவரத்தையும் கேட்டுக்கொண்டு சென்றனர். அன்பும் நடந்தவற்றை எல்லாம்
கூறினான். “சரிப்பா இப்போதைக்கு ஒன்றும் இல்லை, அம்மாவை பார்த்துக்கொள், நாங்கள் காலையில் வந்து பார்க்கிறோம்.
சாதாரண வார்டுக்கு மாற்றிவிடுவார்கள்” எனக் கூறி மருத்துவர்கள் விடைபெற்றனர்.
மறுநாள் விடிந்தது. வீட்டில் கதிரேசனுக்கு முழிப்பு வந்தது. கொஞ்சம் தெளிவு
அடைந்தான். இரவு நடந்தது மொத்தமும் கொஞ்சம் நினைவுக்கு வரத் தொடங்கியது. உடனே, அதிர்ச்சியுடன் எழுந்து ஓடினான். ஜோதி ..
ஜோதி ..அன்பு.. அன்பு... என கூச்சலிட்டான். வெளியே வந்து பார்த்தான். யாருமில்லை
எனத் தெரிந்தவுடன் பக்கத்து வீட்டில் சென்று விசாரித்தான்.அங்கு,”ஜோதிக்கிட்ட நானே கேட்கணும்னு இருந்தேன் , என்ன ஆச்சு நேத்து ஆம்புலன்ஸ் வேற
வந்திட்டுப் போச்சு. இப்ப நீங்க வேற வந்து கேட்கிறீங்க. என்ன ஏதாவது பிரச்சனையா?”என பக்கத்து வீட்டுக்காரம்மா கேட்க "ஆ, ஆமா, ஒண்ணும் இல்ல அப்புறம் சொல்றேன்னு, வீட்டிற்குச் சென்று திகைத்துப் போய்
நின்றான், "கண்டிப்பா, கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குத்தான் ஆம்புலன்ஸ்
போயிருக்கும். என்ன ஆச்சுன்னு தெரியலையே, போலாமா வேணாமா? அன்பு வேற தனியா போயிருக்கான். நாம உடனே
போய்ப் பார்க்கணும். என்னதான் இருந்தாலும் நான் கைநீட்டியிருக்கக்கூடாது” என
புலம்பினான். பிறகு, கைச்செலவிற்கு
கையிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு , ஆஸ்பத்திரியில்
காசு தேவைப்படும் என எண்ணி பணத்தைப் புரட்ட அடகுகடைக்குச் சென்றான் கதிரேசன் .
2 Comments
Super bro vara level
ReplyDeletethank bro
Delete