Ad Code

Responsive Advertisement

Meena’s First Period-3

மீனாவின் முதல் மாதவிடாய்(பாகம்-3)



கணேஷ்:என்னம்மா? என்ன ஆச்சி வலிக்குதா? கொஞ்ச நேரம் கண்ண முடி தூங்குமா, வலி தெரியாம இருக்கும்.

Ganesh: What happened, dear? Is it hurting? Close your eyes and try to sleep for a while. You won’t feel the pain then.

 

மீனா:அதான்பா நானும் பாக்குறேன். ஆனா, வரலையே. உன் மேலதான எப்பவும் சாய்ந்துட்டு படுப்பேன், அப்பதான  தூக்கம் வரும். உன்ன தொடக்கூடாது சொல்லிட்டு போய்ட்டாங்க. பூஜை அறையை வேற எதுக்கு துணியை போட்டு மூடுனாங்க தெரியல?. ஏதோ புதுஸா புதுஸா பண்ணுறீங்க.

Meena: That’s what I’m trying, dad… but sleep isn’t coming. Usually, I sleep only when I rest on you. But now they told me not to touch you. And why did they cover the prayer room with a cloth? Everything feels so strange and new.

 

கணேஷ்:அதுவாமா, இந்த டைம்ல நீ அந்தப் பக்கம் போனா தீட்டுன்னு சொல்லுவாங்க. அதுலாம் ஏம்மா இப்ப? அப்பா மேல சாஞ்சி படுத்தா தூங்குவல? வலி தெரியாதுல?

Ganesh: Ah, that’s because during this time, they say you’re “impure” if you go near those places. But what’s the use of all that now? Won’t you sleep if you rest on your father? The pain will go unnoticed.


மீனா:ம்ம்ம்..  ம்ம்ம..  (என பாவமாக உச்சிக் கொட்டினாள்.)

Meena: Mmm… mmm… (she whimpered softly, like a child).


கணேஷ்:சரி. இரு அப்பாவும் கீழ உட்காந்துட்டேன். வா சாய்ந்து, சமத்து பிள்ளையா தூங்கு.

Ganesh: Alright then. I’ll sit down here. Come, lean on me like a good girl and sleep.

 

மீனா:ஹை ஜாலி !!(என அப்பா மேலே மோதினாள்)

Meena: Yay, so nice! (She leaned happily on her father.)

 

கணேஷ்:சரி சரி, தூங்கு. அப்பதான் வலி தெரியாம இருக்கும்.

Ganesh: Okay, now sleep. Only then you won’t feel the pain.

 

மீனா:எங்க பா, தூக்கம் வரமாட்டேங்குது. ஆமா, தீட்டுன்னு சொன்னீங்களே, அப்படின்னா என்னப்பா?

Meena: Dad, I still can’t sleep… By the way, you said “impure.” What does that mean?

 

கணேஷ்:அதுலாம் எதுக்குமா இப்ப? நீ அமைதியா தூங்கு.

Ganesh: Why do you want to know now, dear? Just sleep peacefully.

 

மீனா:நோ ப்பா! எனக்கு சொல்லுங்க.(என்று அப்பாவின் மடியில் படுத்துக்கொண்டு வற்புறுத்தினாள்.)

Meena: No, dad! Tell me. (She insisted, lying on his lap.)

 

கணேஷ்:நீ சொல்லலனா விடமாட்டல? இரு சொல்றேன். அதாவது, இந்த மாதிரி உனக்கு வரும் நேரத்தில, உன் உடம்பு அசுத்தம்னும், அதனால சாமி கும்புடுற இடம் சுத்தம்னும், அசுத்தப்பட்டவங்க அங்க போகக்கூடாதுனும், பூஜை செய்யக்கூடாதுனும், சாமி கோயிலுக்கு போகக்கூடாகனும், சொல்லுவாங்கமா.

Ganesh: Fine, if you won’t leave me without telling, I’ll explain. During this time, people say your body is “unclean.” That’s why they don’t allow you near the prayer room, or to touch the idols, or go to temples, or do rituals. That’s what they say.

 

மீனா:ஓ.. ஓ... அப்படின்னு சாமி சொல்லுச்சாப்பா? அப்படின்னா நா அங்க போகல.சாமி சொல்லுச்சினா கரெக்டா தான் இருக்கும். நான் உன்னையும் தொடல. (என சட்டுனு எழுந்து விட்டாள் மீனா.)

Meena: Oh… oh… Did God really say that, dad? If God said so, then I won’t go near. God must be right. Then I won’t even touch you. (Meena suddenly sat up.)

 

கணேஷ்:நீ ஏமா எழுந்த?

Ganesh: Why did you sit up now?

 

மீனா:நான்தான் அசுத்தமாச்சே.சாமி சொல்லிச்சில?

Meena: Because I’ve become impure, haven’t I? Didn’t God say so?

 

கணேஷ்:ஐயையோ! நீ கேட்டதுக்கு அப்பா சொன்னேன்மா. நா உன்னைய அப்படியெல்லாம் நினைக்கலாடா. என் தங்கப் பொண்ணு உன்னைய அப்பா அசுத்தம்னு நினைப்பேனா?

Ganesh: Oh no, child! I just told you what others say. I never thought of you that way. How can your father ever see his precious daughter as “impure”?

 

மீனா:நீங்க தானப்பா சாமி சொல்றபடி கேக்கணும் சொல்லிருக்கிங்க, இல்லனா சாமி கண்ண குத்திடும்ல?

Meena: But dad, you said we must obey what God says, or else He’ll get angry.

 

கணேஷ்:(சிரித்துக்கொண்டே)சாமி அப்படியெல்லாம் செய்யாதுமா. சாமி நேர்லலாம் யார்க்கிட்டையும் வந்து, இப்படி இருங்க அப்படி இருங்கனு சொல்லல. எல்லாரும் பின்பற்றுறாங்க, நாமும் பின்பற்றுறோம்.

Ganesh: (smiling) God doesn’t do such things, dear. God never comes directly to anyone and says “do this, don’t do that.” People just follow traditions, and we follow along.

 

மீனா:, அப்ப சாமி சொல்லலையாப்பா?

Meena: Oh, so God never actually said it?

 

கணேஷ்:இல்லடாம்மா.

Ganesh: No, dear.

 

மீனா:அப்போ ஓக்கேப்பா.(என்று, மீண்டும் அப்பாவின் மடியில் படுத்துக்கொண்டாள்.)

Meena: Then it’s okay, dad. (She lay down on his lap again.)

 

கணேஷ்:இதான் அப்பா பெண்ணுன்றது. (என தலையைக் கோதி விட்டார்,பேரன்புடன்.)

Ganesh: That’s my girl. (He caressed her head lovingly.)

 

மீனா:அப்பா, அப்படி சாமியே வந்து சொன்னாலும் நா கேக்கமாட்டேன். நான் உங்ககிட்ட நீங்க என்ன பண்றீங்கனு பாக்க விளையாடுனேன். பரவாயில்ல, நீங்க நல்ல அப்பாதான்.

(என பெருமிதத்துடன் சொன்னாள்.)

Meena: Dad, even if God Himself came and said it, I wouldn’t listen. I just wanted to test what you’d say. But it’s okay, you’re a good father. (She spoke with pride.)

 

கணேஷ்:அது சரி! இந்த வலியிலும் உனக்கு சேட்டை குறையலல?

Ganesh: Is that so! Even in pain, you still find ways to tease me?

 

மீனா:குறையாது..  குறையாது..  (உதட்டில் சிறு புன்னகையுடன்)

Meena: Of course, dad… of course. (She smiled faintly.)

 

கணேஷ்:சரி. என்ன இருந்தாலும் நீ சாமியலாம் அப்படி பேசக்கூடாது. கண்ணத்தில தப்பு போட்டுக்கோ.

Ganesh: Still, dear, you mustn’t speak disrespectfully about God. It’s not right.

 

மீனா:மாட்டேன் போங்கப்பா. எங்க தமிழ் மிஸ், ஒரு நாள் பாடத்தில "மாதா,பிதா,குரு,தெய்வம்னு" ஒன்னு சொல்லிக் கொடுத்தாங்க.இதுதான் வழிப்படுறதுக்கு வரிசை முறைனும் சொன்னாங்க. எனக்குதான் அம்மா இல்ல. சின்ன வயதிலேயே இறந்துட்டாங்க. அப்பா நீங்களே என்னைய அசுத்தம்னு பார்க்கல.அப்பாக்கு அப்புறம் தான சாமி?

Meena: I won’t, dad. But listen… my Tamil teacher once taught us: “Mother, Father, Teacher, God” — that’s the order. I don’t have a mother, she passed away when I was little. You never treated me as impure, dad. If even you don’t think of me that way, then how can God come before you?

 

கணேஷ்:ஆமாம்மா. நீ சொல்லுற மாதிரிதான் எனக்கும் சின்ன வயதில சொல்லி கொடுத்தாங்க.

Ganesh: Yes, that’s true, dear. That’s exactly what they taught me too when I was young.

 

மீனா:உங்களுக்குமாப்பா? சூப்பர் பா! அதான்பா சொல்றேன். நீங்களே என்னை அனுமதிக்கிறீங்க. சாமி என்னைய வராதன்னு எப்படி சொல்லும்? அப்படி சொல்லுச்சினா, நான் அதுக்கிட்ட, நீ எங்கிட்ட வராதனு ("டுக்கா",”கா”) விட்டுடுவேன்.

Meena: Oh, even you were taught that, dad? That’s awesome! That’s why I say — since you accept me, why would God reject me? And if He ever did, I’d just say, “Then I won’t come to you either!”

 

கணேஷ்:எம்மாடி! சரி,சரி. பொறுமையா பேசு. இப்படி கோவம் எல்லாம் படலாம சாமி மேல?

Ganesh: (smiling) Silly girl! Calm down now. Should you really get angry at God like that?

 

கணேஷ்:அதெல்லாம் தெரியாதுப்பா.நீங்க என்னைய அசுத்தம்னு பாக்குறீங்களா? இல்ல அப்படி பார்ப்பீங்களா ?எனக்கு இப்படி வரும் நேரத்தில அதை சொல்லுங்க.

 Meena: I don’t know about all that, dad. But tell me honestly — do you think I’m impure? Would you ever see me that way? Just tell me clearly.


கணேஷ்:அது எப்படிமா? நான்தான் உனக்கு முடியலனா உதவி பண்ணணும். அந்த நேரத்தில நீ மட்டுமா? நானும் நீ இல்லனா தூங்கமாட்டேன்னு தெரியாதா உனக்கு?

Ganesh: How could I, dear? If you’re struggling, it’s my duty to help. Isn’t it true that even I can’t sleep unless you’re beside me?

 

மீனா:அப்புறம் என்னப்பா? அஞ்சு ஆறு நாள் நா சாமியை கும்பிடக் கூடாதுனு,இல்ல கும்பிடவே கூடாதுன்னு சொன்னாலும் எனக்கு பிரச்சனை இல்லப்பா.நா மொத்தமாவே கும்பிடல.நீங்க கூட இருங்க போதும் எனக்கு.(கொஞ்சம் தூக்க கலக்கத்துடன் சொன்னாள்).

Meena: Then it’s settled, dad. Even if they say I can’t pray for five or six days, I don’t care. I won’t pray at all. Being with you is enough for me. (She spoke drowsily.)

 

கணேஷ்:அப்படியெல்லாம் பேசாதமா, நமக்கு சாமியும் முக்கியம்தான் இல்லையா?

Ganesh: Don’t say that, dear. God is still important for us, right?

 

மீனா:அதெல்லாம் இல்லப்பா, எனக்கு அப்பாக்கு அப்புறம்தான் சாமி.நீங்கதான் முக்கியம்.

Meena: Maybe for you, dad. But for me, after you comes God. You’re more important.


கணேஷ்:உனக்கு பிடிச்ச பிள்ளையார் கூட வேண்டாமா?

Ganesh: What about your favorite Ganesha idol then?

 

மீனா:அதெப்படி?நான் மனசுல சொன்னாலே அவருக்குக் கேட்கும்.கிட்ட போய் பேசுறதுக்கு,அவருக்கு சின்ன காது இல்ல.பெரிய காதுப்பா.

Meena: That’s different! If I pray in my heart, He’ll hear me. I don’t need to go close — He has big ears, right?

 

கணேஷ்: அதுவும் சரிதான். (உதுட்டில் சிரிப்புடன்) சரிமா நீ சொல்றபடி அப்பா கேட்டுக்கிறேன். ஆனா சாந்தியத்தை வந்து கேட்டா என்ன பண்றது?

Ganesh: (smiling) That’s true too. Okay then, I’ll do as you say. But what if Shanti aunty asks?

 

மீனா:நா உங்கள தொடல.நீங்க என்னைய தொடல.நா பூஜ அறைகிட்ட போகலனு பொய் சொல்லிக்கலாம்பா.(தூக்கத்திலேயேக் கூறி முடித்தாள்.)

Meena: I won’t touch you. You won’t touch me. And I’ll say I didn’t go near the prayer room. That way it’s fine. (She drifted off to sleep.)

 

(மகளை நினைத்து தந்தை பூரித்துப்போக,மகள் தந்தையின் மடியிலேயே உறங்கினாள்.)

(Thinking of his daughter, Ganesh’s heart swelled with love. Meena fell asleep peacefully on her father’s lap.)

 

அன்பிற்கும், பாசத்திற்கும்,

கருணைக்கும் அசுத்தம்/சுத்தம்

என்ற பாகுபாடு இல்லை.

அசுத்தம்/சுத்தம் வைத்தியத்திற்கும்,

மருத்துவத்திற்கும் தேவைப்படுவதே ஆகும்


(முற்று)

 -நந்தகோபால்


Love, affection, and compassion
 know no difference between “pure” and “impure.”
 Cleanliness and impurity matter only for health
 and medical reasons.

(The End)


 – Nandagopal

 

 

 

 

Post a Comment

0 Comments

Close Menu