Ad Code

Responsive Advertisement

மாற நினைத்தால் மாறலாம்-பாகம் 3


“சேட்டு! நான் அந்த தெருவுக்குள் இருக்கிற ஜோதியோட புருஷன் எனக்கு கொஞ்சம் அவசரமாக பணம் தேவைப்படுது  எனவும் ஏற்கனவே, இங்கு நகை வைத்திருக்கிறோம், கொஞ்சம் பாத்து கொடு சேட்டு”என கதிரேசன் கேட்டான். "அடேய் என்னடா நேத்துதான் உன் பொண்டாட்டி வந்து 2000 வாங்கிட்டு போனாள் கல்யாண நாள் சொல்லி. இப்ப நீ இன்னைக்கு வந்து அவசரம்னு வந்து, நிக்குற? என்ன  புருஷன், பொண்டாட்டியும் டெய்லி வந்து பணம் கேட்டா நா என்ன அன்னதானமா பண்ணிட்டு இருக்கேன்,ஒழுங்காகப் போய்டுயா, காலையில் வந்து கடுப்பேத்தாதே” என சேட்டு கத்தினார். இதனைக் கேட்டதும் கதிரேசனுக்கு இதயம் சற்று நின்றுவிட்டது போல் ஆனது. கல்யாண நாளா, அய்யோ அதற்குத்தான் ஜோதி நேற்று நன்றாக உடை உடுத்தியும், என் முன் அழகாகத் தெரியணும்னு நினைத்திருக்கிறாள். அவளைப்போய்த் தவறாக வேறு பேசிவிட்டேனே, அடிக்க வேறு செய்திருக்கிறேனே' என உள்ளுக்குள்ளே குமுறியவன், உடனே அங்கிருந்து ஓடினான். பஸ் ஸ்டாண்டுக்கு விரைந்த அவன் ஜோதிக்கு ஒன்றும் ஆகி இருக்கக் கூடாது, அவளைப் பார்த்துக் காலில் விழுந்து மன்னித்துவிடுமா என்று சொல்லணும். அந்த அருகதைகூட எனக்கு இருக்கா, தெரியலையே, யாரோ பேசின கதையை நம்பி என் பொண்டாட்டியை நான் சந்தேகப்பட்டிருக்கக் கூடாது என மாறி மாறி யோசித்துக் கொண்டே மருத்துவமனை அடைந்தான் கதிரேசன்.

பலபேரிடம் விசாரித்து அங்கும் இங்கும் வெகுநேரமாகத் தேடி அலைந்தவன் ஒரு வழியாக அன்பைக் கண்டான். விரைந்து அவனிடம் சென்று "ஐயா... அம்மா எங்கப்பா, நேத்து நடக்கக்கூடாததெல்லாம் நடந்திருச்சு, எனக்கே தெரியாம நான் என்னவெல்லாம் பண்ணிட்டேன், அம்மா எங்கே", என முழங்காலிட்டு அழுது தீர்த்தான். அன்பு, "இங்க எதுக்கு வந்த, உனக்கு முக்கியம் குடிக்கிறது. நாங்களெல்லாம் தப்பு பண்றவங்க எங்களை எதுக்கு பார்க்க வந்த? நல்லா இருக்கோமா, இல்லையா. பார்த்துட்டுப் போகலாம்னு வந்தியா? நான் உன்னை அம்மாவை பார்க்கவே விட மாட்டேன், நீ எங்களுக்கு வேண்டாம்" என உறுதிபடக் கூறினான். கதிரேசன், "இல்லப்பா, நேத்து கூட இருக்கிற, பிரெண்ட்ஸ் எல்லாம் பேசுனது ஒரு மாதிரி சந்தேகப்பட தூண்டிச்சு, அவங்கதான் எனக்கு நல்லது நினைக்கிறாங்க, வேலைக்கு வாய்ப்பு தந்தாங்க அப்படிலாம் பேசுனது, வீட்டில் அம்மா கிட்ட சண்டைப்போட்டது வேலைக்கு போறேன் அம்மா கேட்டது, எல்லாம் என்ன யோசிக்கவிடாம இந்தக் குடி பண்ணிருச்சுப்பா, முதல் தடவை குடிச்சிட்டு வந்தது எனக்கு ரொம்ப அசிங்கமாவும், நான் கொடூரமா இருக்கிறதையும் காட்டுது. நீ என்ன புரிஞ்சுக்கோடா, அப்பாவை மன்னிச்சுக்கோடா அன்பு" என, கண்ணில் நீர் வர சுற்றியிருக்கும் அனைவரும் பார்க்க அழுதான். யாரு புரிஞ்சுக்கனும் நானா, நீயா? ஃப்ரெண்ட்ஸ்னு சொல்றியே யாரு ஃப்ரெண்ட்ஸ்? குடிக்காதவரை குடிக்க வச்சு, காசும் உன்கிட்ட இருந்து வாங்கி குடிக்கிறவங்க ஃப்ரெண்ட்ஸா? எனக்கும் ஒரு ஃப்ரெண்டு இருக்கான். ஸ்கூல்ல ஒரு நாள் எல்லாரும் நாங்க அவங்க அவங்க அப்பா என்ன வேலை செய்றாரு, வீட்டுல எப்படி ஸ்ட்ரிக்டா, பாசமா இருப்பார்னு பேசும்போது, என்கிட்டயும் கேட்டாங்க. நான் இல்லடா, என் அப்பா எப்போவாச்சும்தான் நல்லா பேசுவாரு, தூங்கவே விடமாட்டாருடா குடிச்சிட்டு வந்தா, கெட்ட வார்த்தை பேசிட்டே இருப்பாருடா, நான் சில நேரம் அடிச்சுதான் உறங்க வைப்பேன்னு சொன்னேன்.

எல்லாரும் ஓஹோ என்று ஒரு மாதிரி பார்த்தாங்க. கரெக்ட்தான்டா அப்படித்தான் பண்ணனும்னு சொன்னார்கள் எல்லோரும். ஆனால் மணி மட்டும் அப்புறம் என்கிட்ட வந்து, “என்னதான் இருந்தாலும், நீ அப்பாவை அடிப்பது தவறுடா. நீ கோபம் வந்து அடிக்கிறாய் புரிகிறது, ஆனால் உங்கள் அம்மா தான்டா இன்னும் கஷ்டப்படுவார்கள். அவர்கள் முன்னாடி கணவனும், மகனும் இப்படி நடந்துகொள்வது அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாதுடா. முடிந்தவரை கைநீட்டாமல் அப்பாவை திருத்த பாருடா! என்றான். அதனால்தான், நான் நேற்று கூட உன்னை எதுவும் பண்ணாமல் வந்துவிட்டேன். அவன்தான் ஃபிரண்டு. உன் கூட இருக்கிறவர்கள் உன்னை கெடுக்கிறார்கள்ப்பா என சொல்லி முடிக்க, கதிரேசன் உண்மையாகவே தன்னால், தன் குடி பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை உணர்ந்தான். இனி என்னால் முடிந்தவரை நான் குடிக்காமல் இருக்கிறேன்டா. எந்த ஒரு பையனும் ஒரு அப்பாவை இப்படி அறிமுகப்படுத்தக் கூடாது. ஆனால் என் மகனே இதை சந்தித்திருக்கிறான் என அன்பைக் கட்டி அணைத்து ஆறுதல் சொன்னான்.

பின் அன்பு கதிரேசனை ஜோதியிடம் அழைத்துச் சென்றான். கண்விழித்துப் பார்த்தவள், கதிரேசனைப் பார்த்து ஏங்க, "  சாப்பிட்டீங்களா ? நேற்று இரவும் சண்டையினால் நீங்கள் ஒழுங்காகச் சாப்பிடவில்லை. இப்பொழுது நேரம் என்ன தெரியவில்லை. காலையில் டாக்டர் வந்து பார்த்துவிட்டு, நன்றாக இருக்கிறேன்னு சொல்லிட்டுப் போனார்கள்" என்று அன்பு சொன்னான் எனக் குரல் தழுதழுக்க மெதுவாகக் கூறினாள். அவள் கால்களைப் பிடித்துக் கொண்ட கதிரேசன், "என்னை மன்னித்துவிடுமா. நான் பெரிய தவறு செய்துவிட்டேன், பெரிய தவறு செய்துவிட்டேன்" எனக் கண்ணீர் வடித்தான். "ஏங்க, ஏங்க எழுந்திருங்க என் காலைப் பிடித்து என்ன ஆகப் போகிறது? உங்கள் குடிபோதை உங்களைப் பேச வைத்தது. மனசார நீங்கள் அப்படிச் சொல்கிற ஆள் இல்லைன்னு எனக்குத் தெரியாதா?" என ஜோதி கதிரேசனை எழுந்திருக்க வற்புறுத்தினாள். ஜோதியின் பக்குவத்தைக் கண்டு குற்ற உணர்ச்சியில் கதிரேசன் தவித்தான். "நான் குடிப்பதுதானம்மா, இதுவரை உன்னை அடிக்காத என்னையே உன்னை இந்தக் கோலத்தில் பார்க்க வைத்துவிட்டது. இவ்ளோ கேவலமானவனா மாறிட்டேன்ல என அவள் கைகளைப் பிடித்தவாறு புலம்பினான் கதிரேசன். நீங்க மாத்திக்கணும், நீங்க நினைச்சாதான் பழைய மாதிரி மாறமுடியும், தேவையில்லாத சண்டைகள் நமக்குள்ள வராது. இப்ப நீங்க புரிஞ்சுக்கிட்டீங்க அதுவே போதும். மன்னிப்பு உங்க பையன்கிட்ட கேளுங்க, எனக்கு வேண்டாம். நீங்க ரெண்டு பேரும் போய் சாப்பிடுங்க, எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு, நான் தூங்குறேன் என ஜோதி உறங்க ஆரம்பித்தாள்.

 

"ஒரு குடி ஒரு குடும்பத்தை சிதைக்கலாம். ஆனால், உணர்ச்சி ஒரு குடும்பத்தை மீட்டெடுக்கலாம்."

                                                                                                        -நந்தகோபால் கோ

Post a Comment

2 Comments

  1. "மாற நினைத்தால் மாறலாம்" என்ற தலைப்பே மனதை தொட்டது. உன் எழுத்து ஒரு சாதாரண கதையை கூட வாழ்க்கையின் பெரிய பாடமாக மாற்றுது. கதையின் ஒவ்வொரு வரியிலும் நல்ல உந்துதல் இருக்கு. இப்படி எழுத நீங்க தொடரணும் நண்பா – உங்க ப்ளாக் ரொம்ப inspiring-a இருக்கு. Waiting for your next post! 🔥✍️💯

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu