அன்பு
நாடினேன் நாடினேன் கிடைக்கவில்லை
கிடைத்தது கிடைத்தது இருக்கவில்லை
இருந்தது இருந்து நிலைக்கவில்லை
நிலைத்தது நிலைத்தது ஒன்றுமில்லை
ஒன்றுது ஒன்றது இறையுமில்லை
இறையது இறையது வேறேதுமில்லை
அன்பே அது அன்பே அது
அதைவிட ஏதும் பெரிதில்லை.
என்
தாய் தமிழ் மொழி
குமரியில் பிறந்து, காற்றில் கலந்து,
குரலில் தவழ்ந்து, குணவாளாக இருந்து,
கண்டங்கள் கடந்து, காலங்கள் பல கடந்து,
கட்டுமரமாக கன்னித்தமிழாக,
என்னை எழுதவும், பேசவும்
தூண்டிய
மூன்றெழுத்து மூச்சாக என்னுள்
உறைந்திருக்கும்
என் தாயான தமிழே உன்னை வணங்குகிறேன்.
என் தாய் அவள்,
அன்பாக இருந்து அரணாக திகழ்கிறாள்;
ஆதியில் தோன்றியவள் ஆட்சிமொழியாக
இருக்கிறாள்;
இயல், இசை,
நாடகமாக இன்றும் இளமையாக வலம் வருகிறாள்;
ஈகைகள் பல தந்த வள்ளல்களை
ஈன்றெடுத்தவள்;
உலகம் முழுதும் படர்ந்தவள் உள்ளழகும்
கொண்டவள்;
ஊரார் போற்றும் சிறப்புடையவள்;
எங்கும் கலந்தவள் என்றும் நிலைத்து
நிற்பவள்;
ஏட்டு நூல்கள் பல தந்தவள், கவிஞனுக்கு ஏணியாய் இருப்பவள்;
ஐயம் இல்லாமல் படிக்க தனக்கே உரிய
இலக்கணத்தை வடித்தவள்;
ஒற்றுமையாக வாழ வைப்பவள் ஒன்றே குலம்
என்று எடுத்துரைத்தவள்;
ஓதும் கருத்துக்கள் பல தந்தவள்,
ஓங்கி நிற்பவள் ;
ஓளடதமாக இருக்கிறாளே பலரின்
கவிநோய்க்கு,
இவளைத் தவிர வேறு மொழி உள்ளதோ இத்தனைச்
சிறப்புக்கு ?
இவளே அன்னை என் தமிழ் மக்களுக்கு!
உனக்காக கவிதையை எழுத நினைத்தேன்
கவிதையாக வந்தாய் எனக்காக கவிதையாக
மாறினாய்!
கவியுணர்வு கொண்டவன் கவிதையை வடிவமைக்க
சரணடைவான் உன்னிடத்தில்.
-அதில் நான் சிறுப்பிள்ளையம்மா.
ஊக்கம்
எண்ணம் அதனை
விதை என விதை!
நேரம் அதனை
உரம் என கருது !
உழைப்பு அதனை
நீர் என ஊற்று
அச்சம் அதனை
களை என அறு!
கனவு அதனை
அறுவடை செய்!
மரியாதை அதனை
சேமித்துப் பழகு !
அறிவு அதனை
கொள்முதல் செய்!
கல்வி அதனை
பகிர்ந்து உண்டு வாழ்!
·
ஒவ்வொரு வாகனமும்
ஒவ்வொரு இலக்கை நோக்கி,
ஒவ்வொரு பாதையில் செல்கிறது.
ஒன்றை மற்றொன்று பின்தொடருமாயின்
அதன் இலக்கினை அடைதல் இயலாது
நீயும் உன் இலக்கினை நிர்ணயித்து
ஓடு இடையில் அதனை மாற்றாதே.
எதனையும் சார்ந்து நின்று விடாதே.
தன்னை தனக்குள்ளே தஞ்சமாக்கி
தனதருமை தெரியாது,தன்மனதை துன்பறுத்தி,
துணிவு தரும் தத்பொருளைத்
தொலைத்துவிட்டு,
தனக்குத் தானே தண்டனையும் தந்து,
திரைபோட்டு தன்னைத் தேடி, திளைத்து போய்
தன்னகத்தை ததும்பச் செய்து
தனிமைக்குள்ளாக்கப்பட்டு, துயர்வு கொண்டு,
தூக்கம் விட்டு துர்சிந்தனையின்
தாக்கத்தால்
தெரியாது தவறுசெய்யும் திரளான மக்களே!
தேவையற்றது இந்நிலை!
துன்பம் தவிர்,தயக்கம்
தேவையற்றது,
துணிவு கொள், தின்மையில்
தேர்ச்சிக்கொள்,
தென்படும் துன்பங்களைத் தடையெனக்
கொள்ளாது,
தர்மத்தின்பால் தடையினைத் துடை.
தேவையான தர்மநூல்ளை திரட்டு
தங்கச்சுரங்கமென தன்னறிவைத் தோண்டு,
துயர்வில்லால் தளர்வில்லாமல்,
தலைநிமர்ந்து, தலைக்கணம்
தவிர்த்து
தற்பெருமை தனை தீண்டாது.
தெய்வத்தின் தாள்மலர்களைத் தஞ்சமடைந்து
துணிச்சலுடன் தொடு, உனது அம்புகளை
இலக்கு விரைவாக கைசேரும்
உன்ன ரசிச்சு பாரடா
வெளியே சிரிச்சு பேசுடா
உலகம் பிடிக்கும் மாறுடா
முடிஞ்ச கத போருடா
போன வர போதும் டா
புலம்புரது வீணடா
பிறப்பு வரது ஒன்னுடா
பிடிச்ச மாறி வாழுடா
பெண்மைக் கவிதை
உன்னை செதுக்கிய சிற்பி
எத்தனை காலம் யோசித்திருப்பான்
செதுக்கிய பின் அவன் அறிந்தானோ!
இந்தச் சிற்பம்.
அளவிலாத வர்ணனைகளை உள்ளடக்கியதென்று!
மலர்களை கொஞ்சும் வண்டுபோல்
காற்று உன் கூந்தலைக் கொஞ்சி செல்கிறது
தென்றல் போல் மென்மையான குணம்
உடையவளாய் இருக்கிறாய்
மானத்திற்குக் கேடு என்றால்
புயல்போல் பொங்கி எழுகிறாய்!
உயிர்வளியைப் படைத்த இறைவன்
உன்னைப் படைத்ததன் நோக்கம் உணர்ந்தேன்
உயிர்வளியோ உயிரினங்கள் சுவாசிக்க,
சிற்பம் நீயோ கவிஞர்கள் கவிபாடி
வாசிக்க
நீரும் நீயும் ஒன்றல்லவா?
நதியைப் போல அழகிய வளைவுகள்
உன்னிடமும் உண்டல்லவா
நெருப்பின் குணமும் கொண்டாயே!
நீதிநெறி தவறினால் அவ்விடத்தை
அழிக்கும் வல்லமையைப் பெற்றாயே!
நிலமானது உண்பதற்கான உணவுகளை
தலைமுறைகள் கடந்து தந்து வருவதுபோல
உன்னிடமிருந்து தானே பிறக்கிறது
நாளைய தலைமுறையே!
ஆகாயம் பரந்து உயர்ந்து
காணப்படுகிறது என்றால்,
தாய்மை உணர்வுடன் நீ காட்டும்
அன்பும், பரிவும்,
பாசமும்
அதனைவிட உயர்ந்து காணப்படுகிறது
இவ்வுலகில்!
கடனாளி
அன்னை தந்தை வழி பெற்ற கடன்
அன்பின் வழியே கழித்தேனே
உணவினால் பெற்ற கடன்
தினமும் காலை கழித்தேனே
மனைவி வழி வந்த கடனை
மனை வழி மாறாமல் கழித்தேனே
பிள்ளை வழி பெற்ற கடன்
அவர் தம் வளர்ச்சியில் கழித்தேனே
குரு வழி வந்த கடனை
பிறர்க்கு உதவும் படி வாழ்ந்தளித்தேனே
இறைவா உன்பால் பெற்ற கடன்
உனை நினைத்தே கழித்தேனே
என் மரண இறுதியில்
என்னை சுமக்கும் நால்வர் அவர் கடனை
எவ்வாறு கழிப்பேன் இத்தரணியிலே
பிறகொரு பிறப்பு வேண்டுமோ
அதனை அடைப்பதற்கு!!
-நந்தகோபால் கோ
2 Comments
தமிழ் கவிதைக்கு உயிர் கொடுத்திருப்பே போல இருக்கு! உன் வரிகள் ஒவ்வொன்றும் உணர்வோடு கூடிய மென்மை, தேன் போல கசிந்துக் கொண்டு இருதயத்தை தொட்டது. எழுத்து உன்னோடு வாழ breath எடுத்த மாதிரி இருக்கு. இப்படி அருமையான கவிதைகள் தொடரட்டும் நண்பா! Proud of you! ✍️🌸🔥
ReplyDeleteமிக்க நன்றி மணி.
ReplyDelete