Ad Code

Responsive Advertisement

கவிதைத் தொகுப்பு-1



துளிகள்

வாசனைமிக்க மலர்கள்

வளர்வது வாடிப்போவதற்குத்தானே.

 

என்றும் எழுதும்

எழுத்தாளன் விரலுக்கு

விடுமுறை வேண்டி

எழுதுகோல் மையைத் தீர்த்துக்கொண்டது.

 

எறும்பு சிறிதுதான் ஆனால்

அதன் வலி அதற்குப் பெரிதே.

 

இலேசாக தொட்டுச் செல்லும்

இயற்கைக் காற்று 

இடையில் வியர்வைப் போக்க

இயந்திரக் காற்று 

இடைவேளை முடிந்து

இனிதே ஆரம்பம்

இண்டர்வியூ!


காதல் துளிகள் 

காதலின் வலிகள் மோதலின் விளைவு

மோதலில் தொடக்கம் காதலில் முடிவு

  

சுடர் விடும் தீபம்,

அவளானாள் வீசும்

காற்று நானாகக்கூடாதா

முழுதும் என்னுள் கரைந்துப்போகலாகாதா?

 

கொள்ளையடிக்கப்பட்டது

கொள்ளைப்போனது

கௌரவமானது

காதலானது

 

மரத்தின் கிளையில் இருக்கும்

கனியை கவர

மேலே ஏறிய எறும்பு

காற்றினால் வீழ்வது போல்

நானும் வீழ்கிறேன்

உன்னை நெருங்கும் போதெல்லாம்.

 

கார்கால மேகங்கள்

கடன் கேட்கிறதே

கருமை நிறத்தினை

என்னவளின் கூந்தலிலிருந்து.

 

அவள் நல்லவள் தான்

என் காதலுக்கு அல்ல.

 

என்னை வருத்தி வெளிச்சம் கொணர்ந்தேன்

நெருங்க நெருங்க சுடும் என

அஞ்சியவள்

தூக்கியெறிந்து விட்டாள்

தீக்குச்சியென.

 

தீக்குச்சி

தூக்கித்தான் எறிவார்கள் என

தெரிந்தப்பின்னரும்

தீக்குச்சித் தன் பயனைத்

தராமல் செல்வதில்லை.

                 

பற்ற வைத்தும்

பகிர்ந்தளித்தும்

பிறர்க்கு உயிரளித்து

தன் வாழ்வை

முடித்துக் கொள்ளும்

தீக்குச்சியும் ஒரு தியாகி தானே!

 

உரசியதால் பிறந்த

நானோ காற்றில் மறைந்துப்போகிறேன்

உரசுவதாலே பிறக்கும் மானுடா

நீயோ காற்றைக் கொண்டு வாழ்த்துச் செல்கிறாய்.

                                      -இப்படிக்கு தீக்குச்சி

 

அவள்

அவள் என்பவள்

அன்பைத் தரும் அன்னையாகிறாள்

முன் பிறந்து தமைக்கையாகிறாள்

பின் பிறந்து தங்கையாகிறாள்

உடன் பழகும் தோழியாகிறாள்

மனம் பகிர்ந்து காதலாகிறாள்

மணமுடித்து மனைவியாகிறாள்

கருவறையைச் தாங்கும் தளியாகிறாள்

கருவை ஈன்றப்பின் தெய்வமாகிறாள்

தோழில் சுமக்க மழலையாகிறாள்

உன்னை சுமக்கும் மகளாகிறாள்

ஆனால்

நீயோ அவள் பார்த்து அஞ்சும்

மிருகமாக மாறிவருகிறாய்.


என்னவன் 

அவன் என்னை,

அன்னையாக பார்க்கவில்லை

தமக்கையாக பார்க்கவில்லை

தங்கையாக பார்க்கவில்லை

காதலியாக பார்க்கவில்லை

தாரமாக பார்க்கவில்ல

மகளாக பார்க்கவில்லை

மருமகளாக பார்க்கவில்லை

அவனில் ஒன்றாகப் பார்த்தான்.

 

இரவின் நேரம்

கணவன் மனைவியின்

இரு மனங்களும் காதல் எனும்

ஒரே பள்ளியில் பயின்று வர

உடல்கள் இரண்டும்

காமம் என்ற தேர்வினை அறிவிக்க

தூக்கம் எனும் மாணவன்

பரீட்சைக்கு விடுப்பு கேட்க

ஏக்கம் எனும் மாணவன்

அப்பள்ளியில் பயில விண்ணப்பிக்க

அத்தேர்வினை

ஒரு மனம் நாணத்தினாலும்

மறு மனம் வேண்டுதலினாலும்

அணுக முயற்சிக்க

தேர்வினை ரத்து செய்து

மணி எழுப்பியது

மழலையின் அழுகை.

 

கவிதை

எழுதுகோல் கொண்டு

எழுத்துக்களை எழுத

கற்பனையினைக் கொண்டு

காகிதத்தில் நிரப்ப

உருவமில்லா யாதையும்

உருவகப்படுத்த

அணியினைக் கோர்த்து

அழகினை சேர்க்க

வாசிக்க ஏற்ப

வர்ணனையை வடிக்க

மனிதன் படைத்த விந்தை

மகத்தான கவிதை!!!


அவளை எதிர்ப்பார்த்து..

காத்துக் கிடக்கும் கண்கள்

காணவே உன்னை

கவலைகள் களைந்து போகும்

கண்ட பின்பு உன்னை

அழகான உன் சிரிப்பில்

அதிசியங்கள் அவை ஆழ்கிறது வெறுப்பில்

நொடிப்பொழுதே நிகழும் நாடகம்

நிகழ்வுகளோ நீடிப்பதில்லை

நடந்த நினைவுகளோ எளிதில்

நீங்கிவிடுவதில்லை!

 

என் காதலி

கண்ணுக்குள்ளே என் கண்ணுக்குள்ளே

காண்பேன் எந்நேரமே

கன்னியின் முகமே

அது என் காதலியின் முகமே!

 

பண்ணுக்குள்ளே நான்பாடும்

பாட்டுக்குள்ளே

பல்வண்ணம் கூட்ட வருவாளே

பாசமிக்கவள் அவள் என் பாவையே!

 

நெஞ்சுக்குள்ளே என் நெஞ்சுக்குள்ளே

நீருற்றுப் போல் ஓடுமே

நீங்கா நினைவுகளே

நித்தமும் நான் அவளின் நினைவினிலே!

 

மண்ணுகுள்ளே நான் மண்ணுக்குள்ளே

மாண்டாலும் மறையா இருப்பாளே

மனசுக்குள்ளே- மங்கை

அவள் என் உயிருக்குள்ளே!!!

 

காதல் மலர்ந்தது

எதிர்ப் பார்க்காமல் 

எதிரினில் வந்தாய்

என்னை கடந்து சென்றாய்

எதற்காக பார்த்தேன் என

மனம் கேள்விகளை

கேட்காமல் இல்லை

ஏறெடுத்து பார்க்க பயமும்

தடுக்காமல் இல்லை

விழியால் நீ எய்திய அம்புகள்

தாக்காமலும் இல்லை..

என்னோடு இருந்த மனம் 

கண்டது உன் தரிசனம்

விடுப்பு கேட்கவில்லை என்னிடம்

விடை பெற்றது மறுகணம்

வந்தடைந்தது உன்னிடம்

காதல் விளைந்தது அவ்விடம்

விடையிட்டுச் செல்லடி விளைந்த காதல்

விரைவில் கூடுமா

வீணாய்ப்போகுமா?

 

காதல்

கண்கள் பார்த்து களவாடும்

கைகள் கோர்த்து விளையாடும்

கடிதங்கள் விரைந்து பறந்தோடும்

காற்றில் உணர்வுகள் இடமாறும்

கனவுகள் தோன்றும் தினந்தோறும்;


கலாட்டா, கொண்டாட்டம் பல

கவலை, கண் கசக்கல்கள் பல

 

கலையோடு தொடர்புடையது 

கவிதைகள் கூற வைப்பது

கானங்கள் பாட வைப்பது

கால்களை நடனமாட செய்து

கதையாக வளரும்.

காலம் பல கடந்தால் காவியமாகும்.

காணும் காட்சிகளில் குடிக்கொண்டிருக்கும்.

காலம் உள்ள உரை நிலைத்து நிற்கும்.

கடைசி வரை வெற்றிநடை மட்டுமே போடும் காதல்!

                                                                                                     -நந்தகோபால் கோ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 







Post a Comment

4 Comments

  1. தலைப்பு -காதல் துளிகள்:
    "மரத்தின் கிளையில் இருக்கும்
    கனியை கவர
    மேலே ஏறிய எறும்பு
    காற்றினால் வீழ்வது போல்
    நானும் வீழ்கிறேன்
    உன்னை நெருங்கும் போதெல்லாம்."

    இந்த வரிகள் என் மனசுல இடம் எடுத்துரிச்சு! எளிமையான சொற்களில் ஆனந்தமும், வேதனையும் கலந்து ஒரு deep feel கொடுத்தது. Semma bro 🔥✍️

    ReplyDelete
    Replies
    1. மேற்கோள் காட்டி வாழ்த்தியதற்கு நன்றி தோழா

      Delete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu